தாய்மை
- Writers Guild

- Oct 22, 2025
- 1 min read

என்னை இட்டான் இறைவன்
என் தாயின் கருவறையில்!
உருவம் அறியாது
குணம் அறியாது
நான் இருந்தேன் அவள் வயிற்றில்!
உண்ட உணவும்
உடனே வெளிவந்தது!
நான் வளர்ந்தேன்
அவள் தளர்ந்தாள்!
பத்து மாதம் கிட்டியதில்
பதைபதைதாள் என்னை பார்க்க
வலி கொண்டு
வெளி வந்தேன்
படைத்த இறைவனுக்கு
மண்டியிட்டு நன்றி கூறி!
Written By A Nazreen



Comments