top of page

உயிர்

  • Writer: Writers Guild
    Writers Guild
  • Oct 22, 2025
  • 1 min read


இத்தனை வயதாகியும்

குறையவில்லை ஆசை

ரோஜாவில் இருக்கும் முட்கள் முத்தத்தில் குத்தும் உன் மீசை!

பருவம் பிறந்து வரும் காதலை விட

பிறந்த முதலே இருக்கும் - உன்

அன்பு வலிமையானது !

நல்லது கெட்டது சொல்லி தரும்

நடமாடும் நூலகம் நீ!

காலத்தில் சுழற்சியால்

விதியின் வெற்றியால்

இழந்துவிட்டேன் உன்ணை

இன்றும்,

உள்னை நினைத்து "அப்பா"

என்று உச்சரித்தால்

உன் இழப்பின் வலியை

இதயம் கனத்து

கண்கள் குளமாகின்றன!



Written By A Nazreen

Comments


bottom of page